இங்கிலாந்துடன் ஹாக்கி டெஸ்ட் தொடர்: இந்திய மகளிர் அணிக்கு ராணி கேப்டன்

ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி செல்ல உள்ளது. அணியின் கேப்டனாக மூத்த வீராங்கனை ராணி ராம்பால்
இங்கிலாந்துடன் ஹாக்கி டெஸ்ட் தொடர்: இந்திய மகளிர் அணிக்கு ராணி கேப்டன்


ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றுக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்துடன் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி செல்ல உள்ளது. அணியின் கேப்டனாக மூத்த வீராங்கனை ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.
2020-இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கு தகுதி பெற வேண்டும் என்றால் தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெல்ல வேண்டும்.
ஏற்கெனவே அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் பட்டம் வென்றனர்.  பலம் வாய்ந்த இங்கிலாந்து மகளிர் அணியுடன் அடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடர் மார்லோவில் நடைபெறுகிறது. இதற்கான அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.
ராணி ராம்பால் கேப்டனாகவும், கோல் கீப்பர் சவீதா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டிபன்டர்கள் தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கெளர், ரீனா கோக்கர், சலீமாடேட்,  மிட்பீல்டர்கள்-சுஷிலா சானு, நிக்கி பிரதான், மோனிகா, நேஹா கோயல், லிலிலா மின்ஸ், நமீதா டோபோ, கோல்கீப்பர் ரஜனி எட்டிமர்பு, பார்வர்ட்கள்-வந்தனா கட்டாரியா, நவ்நீத் கெளர், லால்ரேமிசியாமி, நவ்ஜோத் கெளர், ஷர்மிளா தேவி.
கேப்டன் ராணி கூறுகையில்: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் வென்று தகுதி பெறுவதே முக்கிய நோக்கமாகும். இதற்காக இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறோம். இளமையும், அனுபவமும் கலந்ததாக அணி உள்ளது. டெஸ்ட் தொடர் வரும் 27-இல் தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com