அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: ஷுப்மன்கில் அபாரம்

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது.
அதிகாரபூர்வமற்ற டெஸ்ட்: ஷுப்மன்கில் அபாரம்
Published on
Updated on
1 min read


இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வலுவான நிலையில் உள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 233/3 ரன்களை எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 92 ரன்களை குவித்தார்.
ஏற்கெனவே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. 
தொடக்க வீரர் ஷுப்மன் கில் 1 சிக்ஸர், 12 பவுண்டரியுடன் 92 ரன்களை குவித்து அவுட்டானார். கருண் நாயர் 78 ரன்களுடனும், ரித்திமான் சாஹா 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இளம் வீரர் பிரியங்க் பஞ்சால் 31, அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். பின்னர் ஷுப்மன் கில்-கருண் நாயர் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். லுங்கி கிடி, முல்டர், சிபாம்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com