மியாமி ஓபன்: ஆஷ்லி பர்டி சாம்பியன்
By DIN | Published On : 01st April 2019 12:34 AM | Last Updated : 01st April 2019 12:34 AM | அ+அ அ- |

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸி. வீராங்கனை ஆஷ்லி பர்டி சாம்பியன் பட்டம் வென்றார்.
மியாமில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செக்.குடியரசின் 5-ஆம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை 7-6. 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி.
இதன் மூலம் டபிள்யுடிஏ மகளிர் தரவரிசையில் தற்போது 11-ஆம் இடத்தில் இருந்து 9-ஆம் இடத்துக்கு முன்னேறினார். கடந்த 20ம் 13-ஆம் ஆண்டுக்கு பின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற சிறப்பையும் ஆஷ்லி பெற்றார்.
22 வயதான பர்டி, 5 ஆண்டுகளுக்கு முன்பு மனதளவில் ஏற்பட்ட பாதிப்பால் டென்னிûஸ விட்டு விலகினார்.
எனினும் இதில் தான் எதிர்காலம் உள்ளது என்பதை உணர்ந்து மீண்டும் ஆடுகளம் திரும்பி வெற்றியை ஈட்டியுள்ளார்.
இரட்டையர் பிரிவு இறுதியிலும் தகுதி பெற்றுள்ளார் ஆஷ்லி. 14 டபிள்யுடிஏ போட்டிகளில் முதன்முறையாக இந்த சீசனில் 14 வெவ்வேறு சாம்பியன்கள் உருவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.