லாலிகா பட்டத்தை நெருங்குகிறது பார்சிலோனா
By DIN | Published On : 01st April 2019 12:30 AM | Last Updated : 01st April 2019 12:30 AM | அ+அ அ- |

ஸ்பெயின் லா லிகா கால்பந்து சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துள்ள பார்சிலோனா அணி மும்முரமாக உள்ளது.
சனிக்கிழமை இரவு கேம்ப் நௌ மைதானத்தில் எஸ்பன்யோல் அணியுடனான ஆட்டத்தில் கடுமையாக சவாலகுக்கு பின் 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வென்றது.
கேப்டன் மெஸ்ஸியின் 2 அற்புத கோல்களால் வெற்றி வசமாகியது. இதன் மூலம் நடப்பு சீசனில் மொத்தம் 31 கோல்களை அடித்துள்ளார் மெஸ்ஸி.
மேலும் இதர அணிகளை காட்டிலுó 13 புள்ளிகள் முன்னிலையுடன் உள்ளது பார்சிலோனா. செவ்வாய்க்கிழமை வில்லாரியல் அணியுடன் மோதுகிறது பார்சிலோனா.
ப்ரீமியர் லீக்-மான்செஸ்டர் சிட்டி மீண்டும் முதலிடம்: இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி மீண்டும் முதலிடத்தை பெற்றுள்ளது.
சனிக்கிழமை இரவு கிரேவன் காட்டேஜில் நடைபெற்ற ஆட்டத்தில் புல்ஹாம் அணியை 2-0 என வென்றது சிட்டி. பெர்னார்டோ சில்வா, செர்ஜியோ அகியுரோ ஆகியோர் கோலடித்தனர். இந்த வெற்றி மூலம் லிவர்பூல் அணியை 1 புள்ளி பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடத்தை பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் வாட்போர்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்.