சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு வெள்ளி
By DIN | Published On : 01st April 2019 12:32 AM | Last Updated : 01st April 2019 12:32 AM | அ+அ அ- |

சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி இறுதிப் போட்டியில் வலுகுறைந்த கொரிய அணியிடம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 2-4 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
இபோ நகரில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா-தென்கொரிய அணிகள் மோதின. வழக்கமான ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் கொரியா 2-4 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோல்வியுறச் செய்தது.
6 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா முதலிடம் பெற்று கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஷூட் அவுட்டில் 1, 4, 5-ஆம் முயற்சிகளில் கோலடிக்க தவறியது இந்தியா.
கொரியா 3-ஆம் முயற்சியில் மட்டுமே கோலடிக்க தவறியது. இதன் மூலம் 3-ஆவது முறையாக பட்டம் வென்றது .

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...