ரபாடாவின் வேகத்தை எதிர்கொள்வாரா ரஸ்ஸல்?
By DIN | Published On : 12th April 2019 01:41 AM | Last Updated : 12th April 2019 01:41 AM | அ+அ அ- |

தில்லி வேகப்பந்து வீச்சாளர் காகிúஸா ரபாடாவின் அபார வேகத்தை எதிர்கொள்வாரா கொல்கத்தாவின் அதிரடி மன்னன் ரஸ்ஸல் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தில்லி-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை இரவு நடக்கிறது. 6 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது கொல்கத்தா. அதே நேரத்தில் தில்லி அணி 6 ஆட்டங்களில் 6 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.
அதிரடி ரஸ்ஸல்: கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் அதிரடி ரஸ்ஸல். 5 இன்னிங்ஸ்களில் 257 ரன்களை சேர்த்துள்ளார். அதில் சிக்ஸர்கள் மூலம் மட்டும் 150 ரன்களை எடுத்தார். சராசரி 128.50 என உள்ளது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அதன் கேப்டன் தோனி மதிநுட்பமாக சுழற்பந்து வீச்சு மூலம் ரஸ்ஸலை கட்டுப்படுத்தினார்.
இதனால் அந்த ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது சென்னை. தில்லியிடம் ஏற்கெனவே ஒரு ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோற்றது கொல்கத்தா. இந்த தோல்விக்கு பழி வாங்கும் எண்ணத்தில் உள்ளது கொல்கத்தா.
புயல்வேக ரபாடா: அதே நேரத்தில் புயல் வேகத்தில் பந்துவீசும் ரபாடாவை உள்ளடக்கி உள்ளது தில்லி. ஈடன் கார்டன் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.
கங்குலியின் நிலை கேள்விக்குறி: அதே நேரத்தில் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்து வருகிறார் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. மேலும் தில்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. பிசிசிஐ மத்தியஸ்தர் டிகே. ஜெயினும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார். இந்நிலையில் கங்குலி தில்லி அணிக்கு ஆலோசனை வழங்கும் வகையில் செயல்படுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்றைய ஆட்டம்
தில்லி-கொல்கத்தா,
நேரம்: இரவு 8 மணி, இடம்: கொல்கத்தா.