2020 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் திவ்யான்ஷ் சிங்
By DIN | Published On : 26th April 2019 11:49 PM | Last Updated : 26th April 2019 11:49 PM | அ+அ அ- |

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வர்.
பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 249.0 புள்ளிகள் குவித்து, வெள்ளி வென்றார் திவ்யான்ஷ். 249.4 புள்ளியுடன் தங்கம் வென்றார் சீனாவின் ஸிசெங் ஹியு.
ஏற்கெனவே இந்தியாவின் அஞ்சும் முட்கில், அபூர்வி சந்தேலா, செளரவ் செளதரி ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.