உலகக் கோப்பை: நடுவர்கள் பட்டியலில் ஓரே இந்தியர் சுந்தரம் ரவி
By DIN | Published On : 26th April 2019 11:47 PM | Last Updated : 26th April 2019 11:47 PM | அ+அ அ- |

IPL 2019 Live Streaming KKR vs KXIP
இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ள 22 நடுவர்கள் பட்டியலில் இந்தியா சார்பில் சுந்தரம் ரவி மட்டுமே இடம் பெற்றுள்ளார்.
வரும் மே 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை உலகக் கோப்பை போட்டி நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்று 48 ஆட்டங்களில் ஆட உள்ளன.
இதற்காக 16 நடுவர்கள், 6 ஆட்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தியா சார்பில் நடுவர் சுந்தரம் ரவி மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.