செய்திகள் சில வரிகளில்...
By DIN | Published On : 26th April 2019 01:33 AM | Last Updated : 26th April 2019 01:33 AM | அ+அ அ- |

சீனாவின் ஸியானில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா காக்ரன் (68 கிலோ), மஞ்சுகுமாரி (59 கிலோ) பிரிவுகளில் வெண்கலம் வென்றனர். ஏனைய வீராங்கனைகளான சீமா 50 கிலோ), லலிதா (55 கிலோ), பூஜா (76 கிலோ) தோல்வியுற்றனர்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள தேசிய சீனியர் ஹாக்கி மகளிர் அணிக்கான பயிற்சி முகாமில் கேப்டன் ராணி ராம்பால் உள்பட 60 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக அண்மையில் மலேசிய தொடரில் ராணி பங்கேற்கவில்லை. மே 4-இல் நடைபெறும் தேர்வில் வீராங்கனைகள் எண்ணிக்கை 33 ஆக குறைக்கப்படும்.
தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூரு அணி வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் மீதமுள்ள ஐபிஎல் சீசனில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் காயமுற்றார் ஸ்டெய்ன்.
ஆதாயம் தரும் இரட்டை பதவி தொடர்பாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பேட்ஸ்மேன் விவிஎஸ். லஷ்மணுக்கு பிசிசிஐ மத்தியஸ்தர் மற்றும் நெறிமுறைகள் அலுவலர் நீதிபதி டிகே. ஜெயின் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கான மே.இ,தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ் கெயில், ஆன்ட்ரெ ரஸ்ஸல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.