துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை இந்தியாவுக்கு 2 தங்கம்
By DIN | Published On : 26th April 2019 01:45 AM | Last Updated : 26th April 2019 01:45 AM | அ+அ அ- |

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எப் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் வியாழக்கிழமை ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் அன்ஜும் மொட்கில்-திவ்யான்ஸ் சிங் பன்வார் இணை 17-15 என்ற புள்ளிக்கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
அதே போல் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கர்-செளரவ் செளதரி இணை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் சீன இணையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.