முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்பில் சென்னை
By DIN | Published On : 26th April 2019 01:46 AM | Last Updated : 26th April 2019 01:46 AM | அ+அ அ- |

ஐபிஎல் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது நடப்பு சாம்பியன் சென்னை.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது. 2 தொடர் தோல்விகளுக்கு பின், தோனி தலைமையிலான அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை வென்றது. பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றது.
அதே நேரத்தில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள மும்பை, இறுதியாக ராஜஸ்தானுக்கு எதிரானஆட்டத்தில் தோல்வியடைந்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவேண்டும் என்றதீவிரத்தில் உள்ளது மும்பை.
சென்னை அணியில் வாட்சன் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளார்.
சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் ஆகியோர் இன்னும் சிறப்பாக ஆட வேண்டியுள்ளது. பந்துவீச்சில் தீபக் சஹார், ஹர்பஜன், தாஹிர், ஜடேஜா வலு சேர்க்கின்றனர்.
மும்பை அணியில் ரோஹித் சர்மா, டி காக், பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள், என பேட்டிங் வலுவாகவே உள்ளது. பந்துவீச்சும் பும்ரா, பெஹ்ரன்டர்ப், பாண்டியா ஆகியோரால் சிறப்பாக உள்ளது.