ஆஷஸ்: இங்கிலாந்து 374 ஆல்அவுட்

ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஷஸ்: இங்கிலாந்து 374 ஆல்அவுட்
Updated on
1 min read

ஆஷஸ் தொடரின் ஒரு பகுதியாக ஆஸி. அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸி.யைக் காட்டிலும் 90 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்களை சேர்த்திருந்த இங்கிலாந்து சனிக்கிழமை தனது ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தது.
 பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களுடன் பேட் கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். இது டெஸ்ட் ஆட்டங்களில் ஸ்டோக்ஸ் பதிவு செய்த 18-ஆவது அரைசதமாகும்.
 ரோரி பர்ன்ஸ் 133: பேர்ஸ்டோ 8, மொயின் அலி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
 முதல் டெஸ்டில் அறிமுகமான ரோரி பர்ன்ஸ் 133 ரன்களுடன் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 17 பவுண்டரிகளுடன் 312 பந்துகளில் அவர் சதமடித்து லயான் பந்தில் அவுட்டானார்.
 இங்கிலாந்து சரிவு: இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டும் என எதிர்பார்த்த நிலையில், 10 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து சரிவு கண்டது.
 உணவு இடைவேளையின் போது 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை எடுத்திருந்த நிலையில் பின்னர் ஆட்டம் தொடங்கியதும், ஸ்டுவட் பிராட் 29 ரன்களுடன் அவுட்டானார். அப்போது 9 விக்கெட் இழப்புக்கு 367 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து.
 அவருக்கு பின் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 3 ரன்களுடன் வெளியேறினார். 135.5 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
 ஆஸி. தரப்பில் பேட் கம்மின்ஸ் 3-84, லயான் 3-112, பட்டின்ஸன் 2-82, சிடில் 2-52 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 ஆஸி. அணி 124/3: பின்னர் தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடர்ந்து ஆஸி. அணி ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்திருந்தது.
 பேங்கிராப்ட் 7, வார்னர் 8, உஸ்மான் காஜா 40 ரன்களுக்கு அவுட்டானார்கள். ஸ்மித் 46, டிராவிஸ் ஹெட் 21 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
 இங்கிலாந்தைக் காட்டிலும் 34 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com