மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை
By DIN | Published On : 04th August 2019 02:46 AM | Last Updated : 04th August 2019 02:46 AM | அ+அ அ- |

பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் போது, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு மீது முறைகேடு புகார்களை கூறிய நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிலி மற்றும் ஆர்ஜென்டீனா இடையே நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் தவறு புரிந்ததாக மெஸ்ஸி வெளியே அனுப்பப்பட்டார். மேலும் பிரேசில் அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவுக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் 2-0 என தோல்வியுற்றது.
இதனால் கொதிப்புற்ற மெஸ்ஸி, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் பிரேசில் ஆதிக்கம் செலுத்தி முறைகேடுகள் செய்து வருகிறது என மெஸ்ஸி விமர்சித்திருந்தார். ஊழலும், நடுவர்களும் கால்பந்து விளையாட்டை ரசிக்க முடியாமல் செய்கின்றன எனவும் கூறினார்.
இதற்கிடையே மெஸ்ஸியின் விமர்சனம் குறித்து ஆய்வு செய்த கான்மெபால் 3 மாதங்கள் கால்பந்து ஆட்டங்களில் பங்கேற்க மெஸ்ஸிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அடுத்து நவம்பர் மாதம் தான் மெஸ்ஸி தனது நாட்டுக்கு மீண்டும் ஆட முடியும். இது கால்பந்து வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.