2ஆவது டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 168 ரன்கள் இலக்கு
By DIN | Published On : 04th August 2019 10:52 PM | Last Updated : 04th August 2019 10:52 PM | அ+அ அ- |

இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 168 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது 'டுவென்டி-20' அமெரிக்காவின் புளோரிடாவின் லாடர்ஹில் கவுண்டி மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்தனர். ஷிகர் தவான் 23 ரன்னிலும், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ரிஷப் பந்த் 4, விராட் கோலி 28, மணீஷ் பாண்டே 6 ரன்களை எடுத்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.
கடைசியில் க்ருணால் பாண்டியா 20 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் ஒஷானே தாமஸ் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கீமோ பால் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
அந்த அணி 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.