முதல் டெஸ்டில் தத்தளித்த இந்தியா: நங்கூரமிட்ட ரஹானே

மயங்க் அகர்வால் (5), புஜாரா (2) மற்றும் கேப்டன் கோலி (9) ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.
முதல் டெஸ்டில் தத்தளித்த இந்தியா: நங்கூரமிட்ட ரஹானே

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி மயங்க் அகர்வால் (5), புஜாரா (2) மற்றும் கேப்டன் கோலி (9) ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.

இந்நிலையில், கே.எல்.ராகுலுடன் இணைந்த துணைக் கேப்டன் ரஹானே, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 44 ரன்கள் எடுத்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹனுமா விஹாரி 32 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே அரைசதம் கடந்தார். 163 பந்துகளில் 10 பவுண்டரிகளின் உதவியுடன் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 20 ரன்களுடனும், ஜடேஜா 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. மே.இ.தீவுகள் தரப்பில் கீமர் ரோச் 3 விக்கெட்டுகளையும், கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சேஸ் ஒரு விக்கெட் எடுத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com