சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்: ரவீந்திர ஜடேஜா

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். 
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்: ரவீந்திர ஜடேஜா

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, கடைசி கட்ட வீரர்களுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் ஏற்படுத்த முடிவு செய்தேன். எனது ஆட்டத்திறன் கவலையளிக்கும் வகையில் இருந்தது. எனவே சிறப்பான பங்களிப்பை வழங்க விரும்பினேன். நேர்மறை சிந்தனையுடன் செயல்பட்டதால் எனது ஆட்டமும் சரியாக அமைந்தது, பந்துகளை நினைத்த மாதிரி அடிக்க முடிந்தது. 

கூடிய வரை விக்கெட்டை பறிகொடுக்காமல் களத்தில் இருக்க திட்டமிட்டு, அதற்கு ஏற்றமாதிரி எனது பேட்டிங்கை செயல்படுத்தினேன். குறிப்பாக ஒவ்வொரு ஓவராக ஆடுவதற்கு பழகிக்கொண்டேன். ஏனெனில் ஒரு அணியின் கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது எதிரணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும். அப்போதைய சூழலில் இந்திய அணியின் செயல்திட்டமும் அதுவாகவே இருந்தது.

கேப்டன் என் மீது வைத்த நம்பிக்கை எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக எனது ஆட்டமும் அதிர்ஷ்டவசமாக சிறப்பாகவே அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com