துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்ப் பெண் இளவேனில் | Elavenil Valarivan
By எழில் | Published On : 29th August 2019 10:49 AM | Last Updated : 29th August 2019 11:19 AM | அ+அ அ- |

குஜராத்தில் வசிக்கும் 20 வயது தமிழ்ப் பெண்ணான இளவேனில் வாலறிவன், ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் 251.7 புள்ளிகள் பெற்று அவர் தங்கம் வென்றுள்ளார். கடந்த வருடம், சிட்னியில் நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் இளவேனில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார். இந்நிலையில் சீனியர் உலகக் கோப்பைப் போட்டியில் அவர் முதல்முறையாகத் தங்கம் வெல்கிறார்.
இந்தப் போட்டியில் அபூர்வி சண்டேலா, அஞ்சலி பக்வத் ஆகியோருக்குப் பிறகு தங்கம் வெல்லும் 3-வது இந்திய வீராங்கனை, இளவேனில். கடலூரில் பிறந்த இவர், இரு வயதுக்குப் பிறகு அஹமதாபாத்தில் வசித்து வருகிறார்.