சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரைத் தேடும் சச்சின்: காரணம் என்ன?

நான் அவரிடம் சொன்னேன், இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்துள்ளீர்கள்...
சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரைத் தேடும் சச்சின்: காரணம் என்ன?


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது தனக்கு உதவிய சென்னை தாஜ் கோர மண்டல் ஊழியரை தான் தேடி வருவதாக சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய முழங்கைத் தடுப்பு பற்றி கூறிய ஆலோசனைக்குப் பின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரைச் சந்திக்க ஆசைப்படுகிறேன். கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தன்னுடைய ட்வீட்டை ஆங்கிலத்திலும் பிறகு தமிழிலும் அவர் வெளியிட்டுள்ளார்.

விடியோவில் அவர் கூறியுள்ளதாவது: ஹோட்டலில் தங்கியிருந்தபோது நான் காபி கேட்டேன். ஊழியர் ஒருவர் கொண்டு வந்தார். என்னிடம், கிரிக்கெட் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கூறினார். நீங்கள் முழங்கைத் தடுப்பைப் பயன்படுத்தும்போது நான் கவனித்துள்ளேன், அப்போது உங்களுடைய பேட்டின் ஸ்விங் மாறுகிறது என்ரார். நான் இதைப் பற்றி யாரிடமும் பேசியதில்லை. எனக்கு மட்டுமே அதைப் பற்றி தெரியும். மேலும் அவர் சொன்னார், நான் உங்கள் பேட்டிங்கை மீண்டும் மீண்டும் பார்ப்பேன். அப்போதுதான் கவனித்தேன், முழங்கைத் தடுப்பு அணிந்திருக்கும்போது உங்களுடைய பேட்டின் ஸ்விங் மாறுகிறது என்றார். நான் அவரிடம் சொன்னேன், இந்த உலகத்தில் நீங்கள் மட்டும்தான் அதைக் கண்டுபிடித்துள்ளீர்கள் என்றேன். அதன்பிறகு என்னுடைய முழங்கைத் தடுப்பின் வடிவத்தை மாற்றிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com