பாகிஸ்தானை விடவும் இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பேட்டி!

2-வது டெஸ்டை பாகிஸ்தான் அணி, 263 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. வெற்றிக்குப் பிறகு...
பாகிஸ்தானை விடவும் இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பேட்டி!

2009-ல் பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான லாகூர் டெஸ்ட், தீவிரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்டது. மைதானத்துக்கு இலங்கை அணி வீரர்களை அழைத்து வந்த பேருந்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டார்கள். சில வீரர்களும் நிர்வாகிகளும் காயமடைந்தார்கள். இதையடுத்து பாகிஸ்தானில் சர்வதேச ஆட்டங்கள் நடைபெறுவது தடைபட்டது. சமீபகாலமாகத்தான் டி20, ஒருநாள் ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அங்கு டெஸ்ட்  ஆட்டம் நடைபெற்றுள்ளது. இலங்கை அணி ராவல்பிண்டியிலும் கராச்சியிலும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்டை பாகிஸ்தான் அணி, 263 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் இசான் மணி பேட்டியளித்ததாவது:

பாகிஸ்தான் நாடு பாதுகாப்பானது என நாங்கள் நிரூபித்துள்ளோம். இதற்குப் பிறகும் இங்கு வர இதர அணியினர் மறுத்தால், அதற்கான காரணங்களை ஆதாரத்துடன் சொல்லவேண்டும். இன்றைக்கு, பாகிஸ்தானை விடவும் இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இலங்கை விளையாடிய இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு பாகிஸ்தானின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாரும் சந்தேகம் வரக்கூடாது. பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட் இதன் மூலம் மீண்டும் மலரவுள்ளது. பாகிஸ்தான் குறித்த நேர்மறை எண்ணங்கள் உருவாக ஊடகமும் ரசிகர்களும் உதவியுள்ளார்கள். அடுத்ததாக வங்கதேசம் இங்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடும் என நம்புகிறோம். இலங்கை அணியால் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ய முடிகிறபோது வேறு எந்த அணியாலும் முடியும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com