பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை: ஐபிஎல் ஏலத்தில் ரூ.15.50 கோடிக்குத் தேர்வான கம்மின்ஸ்!
By எழில் | Published On : 25th December 2019 11:04 AM | Last Updated : 25th December 2019 11:04 AM | அ+அ அ- |

கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தன. ஆஸி. வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸை ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வானவர் என்கிற பெருமையை அடைந்தார் கம்மின்ஸ். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.
பாக்ஸிங் டே டெஸ்டில் பங்குபெறும் கம்மின்ஸ், இதுகுறித்து கூறியதாவது:
ஐபிஎல்-லில் கிடைக்கும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என் காதலி உடனே சொன்னார், நம் நாய்க்கு நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கலாம் என்றார். இந்த அதிகப் பணத்தால் நான் மாறக்கூடாது என நினைக்கிறேன். நல்லவேளையாக, என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள். நான் இன்னமும் கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், நான் அதை மிகவும் விரும்புவதால் தான். நடந்த அனைத்துக்கும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று கூறியுள்ளார்.