சுடச்சுட

  


  இத்தாலியின் சீரி ஏ கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜுவென்டஸ் அணி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் 3-0 என்ற கோல் கணக்கில் சாஸ்லோ அணியை வீழ்த்தியது.
  தொடக்கம் முதலே ஜுவென்டஸ் அணியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. அதன் வீரர் சாமி கேதிரா 23-ஆம் நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
  அதன்பின் இரண்டாவது பாதியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 70-ஆவது நிமிடத்திலும், எம்ரே கேன் 86-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். இறுதியில் 3-0 என வென்றது ஜுவென்டஸ். இந்த வெற்றியின் மூலம் 11 புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது அந்த அணி. அதற்கு பின் நேபோலி, இன்டர் மிலன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
  லாலிகா: பார்சிலோனா ஆட்டம் டிரா
  ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி-அதலெட்டிக் பில்போ மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. தொடை காயத்தால் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஆட முடியாத நிலையில், பார்சிலோனா அணி சிக்கலுக்கு தள்ளப்பட்டது. தொடர்ந்து 3 ஆட்டங்களில் அந்த அணி வெல்லவில்லை. மேலும் அதன் வைரியான ரியல் மாட்ரிட் அணியும், புள்ளிகள் பட்டியலில் முன்னேறி வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai