புரோ வாலிபால்: இறுதிச் சுற்றில் சென்னை ஸ்பார்டன்ஸ்

புரோ வாலிபால் லீக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு உள்ளூர் அணியான சென்னை ஸ்பார்டன்ஸ் முன்னேறியுள்ளது.
வெற்றி மகிழ்ச்சியில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் சென்னை ஸ்பார்டன்ஸ் வீரர்கள்.


புரோ வாலிபால் லீக் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு உள்ளூர் அணியான சென்னை ஸ்பார்டன்ஸ் முன்னேறியுள்ளது.
பிவிஎல் ஒரு பகுதியாக ஏற்கெனவே காலிக்கட் ஹீரோஸ் அணி செவ்வாய்க்கிழமை நடந்த அரையிறுதியில் யு மும்பா அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் புதன்கிழமை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. பலம் வாய்ந்த கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணியிடம் முதல் கட்டப் போட்டில் சென்னை ஸ்பார்டன்ஸ் தோல்வி கண்டிருந்தது.
இதற்கு பழிதீர்க்கும் வகையில் சென்னை அணி ஆக்ரோஷமாக ஆடியது. முதல் செட்டை 14-16 என சென்னை வென்றது. அதற்கு அடுத்த 2 செட்களை 15-9, 15-10 என மும்பை வென்ற நிலையில், நான்காவது செட்டை 8-15 எனவும்,  இறுதி செட்டையும் 13-15 எனவும் சென்னை கைப்பற்றியது.
22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சென்னை ஸ்பார்டன்ஸ்-காலிக்கட் ஹீரோஸ் அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com