அச்ரேகர் மறைவு: இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி
By DIN | Published On : 04th January 2019 01:04 AM | Last Updated : 04th January 2019 01:04 AM | அ+அ அ- |

பிங்க் நிற அடையாளத்துடன் கோலி
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர் இறுதிச் சடங்கு மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் டெண்டுல்கர், வினோத் காம்ளி, பல்விந்தர் சிங் சாந்து, சந்திரகாந்த் பண்டிட் உள்பட ஏராளமான வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கருப்பு பட்டையுடன் இந்திய வீரர்கள்:
இதற்கிடையே சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கிய நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் தங்கள் சீருடையில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கினர். மறைந்த பயிற்சியாளர் அச்ரேகருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.
பிங்க் டெஸ்ட் போட்டி: ஆஸி. முன்னாள் பெளலர் மெக்கிராத் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது பணிக்கு வலு சேர்க்கும் வகையில் சிட்னி மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தில் ஸ்டம்புகள், உள்பட அனைத்து பிங்க் நிறத்தில் இடம் பெற்றன. இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது கையுறை, பேட், பேடில் பிங்க் நிற அடையாளங்களை இடம்பெறச்செய்திருந்தார்.