ஹாஃப்மேன் கோப்பை: இறுதியில் ஸ்விட்சர்லாந்து
By DIN | Published On : 04th January 2019 01:02 AM | Last Updated : 04th January 2019 01:02 AM | அ+அ அ- |

ரோஜர் பெடரரின் அபார ஆட்டத்தால் ஹாஃப்மேன் கோப்பை போட்டி இறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ஸ்விட்சர்லாந்து முன்னேறியது.
கலப்பு அணிகள் குரூப் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கிரீஸின் சிட்ஸிபாஸை 7-6, 7-6 என்ற நேர் செட்களில் வென்றார் பெடரர்.
மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் மரியா சக்கரி 6-3, 6-4 என பெலிண்டாவை வென்றார்.