21 வயதில் இத்தனை சாதனைகளா?: சிட்னியில் அசத்திய ரிஷப் பந்த்!

குறுகிய காலத்தில் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்...
21 வயதில் இத்தனை சாதனைகளா?: சிட்னியில் அசத்திய ரிஷப் பந்த்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்:

* குறுகிய காலத்தில் ரிஷப் பந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகள்

- டெஸ்ட் கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்து தனது முதல் ரன்னை எடுத்த இந்திய வீரர்
- இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்
- ஒரு டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்
- ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர்
- ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்
* வெளிநாடுகளில் இரு சதமடித்துள்ள இந்திய விக்கெட் கீப்பர்
* துணைக்கண்ட விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் தொடரில் 200 ரன்களும் 20 கேட்சுகளும் பிடித்த முதல் விக்கெட் கீப்பர். 

* ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன்பு 1967-ல் ஃபரூக் என்ஜினியர் அடிலெய்டில் 89 ரன்கள் எடுத்திருந்தார். 2018-ல் இங்கிலாந்தில் முதல் சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கிற பெருமையைப் பெற்றார் பந்த். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய சேனா (SENA) எனக் குறிப்பிடப்படும் நாடுகளில் டெஸ்ட் சதமடித்த ஒரே இந்திய விக்கெட் கீப்பர் பந்த் மட்டும்தான். 

* ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் சதமடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் - ஜெஃப் டுஜான் (1984), ரிஷப் பந்த் (2018-19). 

* இந்திய விக்கெட் கீப்பர் டெஸ்டில் எடுத்துள்ள அதிக ரன்கள்

224 - தோனி  vs ஆஸ்திரேலியா, சென்னை 2013
192 - குந்தேரன் vs இங்கிலாந்து, சென்னை 1964
159* - ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா, சிட்னி 2018

ஆஸ்திரேலியா அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்

டி வில்லியர்ஸ் 169 ரன்கள் - பெர்த் 2012-13
ரிஷப் பந்த் 159* ரன்கள் - சிட்னி 2018-19

7-ம் நிலை மற்றும் அதற்கு கீழான வெளிநாட்டு பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவில் எடுத்த ரன்கள்

ரஞ்சித்சிங்ஜி - 175 ரன்கள், சிட்னி 1897.
ரிஷப் பந்த் 159* ரன்கள் - சிட்னி 2018-19

* ஆசியாவுக்கு வெளியே டெஸ்ட் சதங்கள்

ரிஷப் பந்த் - 2
தோனி - 0

* ஆசியாவுக்கு வெளியே சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர்கள்

118 ரன்கள் - விஜய் மஞ்ச்ரேக்கர் vs மே.இ., 1959
115 ரன்கள் - அஜய் ராத்ரா vs மே.இ., 2002
104 ரன்கள் - சாஹா vs மே.இ., 2016
114 ரன்கள் - ரிஷப் பந்த் vs இங்கிலாந்து, 2018
159* ரன்கள் - ரிஷப் பந்த் vs ஆஸ்திரேலியா, 2019

* 21 வயதுக்குள் 2 சதங்கள் அடித்துள்ள முதல் விக்கெட் கீப்பர், ரிஷப் பந்த். இரண்டுமே ஆசியாவுக்கு வெளியே எடுக்கப்பட்டவை. 

* ரிஷப் பந்தும் ஜடேஜாவும் 7-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியாவில் 7-வது விக்கெட்டுக்கு எடுத்துள்ள அதிகபட்ச ரன் இது. இந்திய அணிக்கு வெளிநாடுகளில் இது 2-வது பெரிய கூட்டணி. இதற்கு முன்பு, 2002-ல்,  மேற்கிந்தியத் தீவுகளில் விவிஎஸ் லக்‌ஷ்மணும் ராத்ராவும் 7-வது விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்தார்கள். 

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டும்தான். இது இரண்டாவது தடவை. 2008-ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இதுபோல தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: அதிக  ரன்கள்

புஜாரா - 521 ரன்கள்
ரிஷப் பந்த் - 350 ரன்கள்
விராட் கோலி - 282 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com