தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்
By DIN | Published On : 07th January 2019 02:34 AM | Last Updated : 07th January 2019 02:34 AM | அ+அ அ- |

42 ஆண்டுகளுக்கு பின் 9-ஆவது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன் போட்டி (பி டிவிஷன்) சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
கடந்த 1977-இல் இறுதியாக எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தேசிய சீனியர் சாம்பியன் போட்டி நடைபெற்றது. அதற்கு பின் தற்போது சென்னையில் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், ஐசிஎப் முகமது ஷாகித் மைதானத்தில் போட்டிகள் நடக்கின்றன.
கடந்த 2014-க்கு பின் ஏ மற்றும் பி டிவிஷன்களாக பிரிக்கப்பட்டு இணை உறுப்பினர்களையும் சேர்த்து போட்டி நடத்த ஹாக்கி இந்தியா நடவடிக்கை எடுத்தது.
சென்னையில் இப்போட்டியில் மொத்தம் 90 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. 41 அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இறுதிச் சுற்றில் பங்கேற்கும் முதலிரண்டு அணிகளும் ஏ டிவிஷனுக்கு முன்னேறும்.