வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர்: வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா

ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதறையாக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடர்: வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா

ஆஸி. 300 ஆல் அவுட், பாலோ ஆன், மோசமான வானிலையால் ஆட்டம் பாதிப்பு
ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதறையாக வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றியை எதிர்நோக்கியுள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
 ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆனைத் தொடர்ந்து அந்த அணி 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
 இந்தியா-ஆஸி. அணிகள் இடையே நடைபெற்று வரும் 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. இதன் கடைசி ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இதில் தனது முதல் இன்னிங்ஸில் இந்தியா 622-7 எடுத்து டிக்ளேர் செய்தது.
 பின்னர் தனது முதல் இன்னிங்ûஸ ஆஸி. அணி தொடர்ந்தது. 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை அந்த அணி எடுத்திருந்த போது, மழை, வெளிச்சமின்மையால் மூன்றாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.
 சுழலில் சுருண்ட ஆஸி.: இதன் தொடர்ச்சியாக நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆஸி. வீரர்கள் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், பேட் கம்மின்ஸ் ஆடத் தொடங்கினர். ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி. அணி சுருண்டது. பேட் கம்மின்ஸ் 25 ரன்களோடு சமி பந்தில் போல்டானார்.
 அவருக்கு பின் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 37 ரன்களுக்கு பும்ரா பந்தில் போல்டானார். நாதன் லயன் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ரன்களை குவிக்க முயன்ற ஜோஷ் ஹேஸல்வுட் 21 ரன்களில் குல்தீப்யாதவ் பந்தில் எல்பிடபிள்யு ஆனார். மிச்செல்ஸ்டார்க் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 முதல் இன்னிங்ஸில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 300 ரன்களை எடுத்தது ஆஸி.
 ஹேஸல்வுட் அடித்த பந்தை கேட்ச் பிடிக்காமல் ஹனுமா விஹாரி தவறவிட்டதால், அவர் பின்னர் மிச்செல் ஸ்டார்குடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 42 ரன்களை சேர்த்தார்.
 குல்தீப் யாதவ் 5 விக்கெட்: இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5-99 விக்கெட்டை வீழ்த்தினார். சமி 2-58, ஜடேஜா 2-73, பும்ரா 1-62 விக்கெட்டை வீழ்த்தினர்.
 ஆஸி. அணிக்கு பாலோ ஆன்: இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை பெற்றதால் பாலோ ஆன் செய்யுமாறு கூறியது. இதைத் தொடர்ந்து ஆஸி. அணி தனது இரண்டாவது இன்னிங்ûஸ தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், 2, உஸ்மான் கவாஜா 4 ரன்களுடன் மொத்தம் 4 ஓவர்களில் 6 ரன்களை எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது. நடுவர்கள், வீரர்களுடன் கலந்து ஆலோசித்து ஆட்டத்தை ஒத்தி வைத்தனர்.
 316 ரன்கள் முன்னிலை: நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஆஸி.யைக் காட்டிலும் 316 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.
 2005-க்கு பின் முதல் பாலோ ஆன்: கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது முதன்முறையாக ஆஸி. அணி பாலோ ஆன் வாங்கியுள்ளது. மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மீத் ஆகியோர் கேப்டன்களாக இருந்த போது பாலோ ஆன் பெறவில்லை. சொந்த மண்ணில் 1988-இல் இதே சிட்னி மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடும் போது, பாலோ ஆனை பெற்றது ஆஸி.
 காலை வேளை ஆட்டம் மழையால்பாதிப்பு: தொடர் மழை, வெளிச்சமின்மையால் காலை முதல் வேளை ஆட்டம் பாதிக்கப்பட்டது. வழக்கமான நேரத்தைவிட 30 நிமிடங்கள் முன்னரே துவக்க திட்டமிட்டாலும் ஒரு பந்துகூட வீசப்படவில்லை.
 2-ஆவது முறையாக குல்தீப் 5 விக்கெட்: இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2-ஆவது முறையாக 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
 ஹனுமா விஹாரி காயம்: ஆட்டத்தின் இடையே ஹனுமா விஹாரி இடது தோள்பட்டையில் காயமடைந்து வெளியேறிதால் அவருக்கு பதிலாக ஹார்திக் பாண்டியா பீல்டிங் மேற்கொண்டார்.
 இந்தியா வசம் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் வெற்றி: தொடர் மழையால் மாலை ஆட்ட நேர முடிவு வரை மீண்டும் ஆட்டம் தொடங்கவில்லை. மைதானத்தில் ஆடுகளம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே உள்ள நிலையில் ஆஸி. அணியை வெற்றி பெற ஆல் அவுட்டாக்க வேண்டும். இல்லை தொடர் டிராவில் முடிந்தாலும் இந்தியா தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும்.
 கடந்த 1947-48 முதல் இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. ஆனால் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றியதில்லை. டெஸ்ட் ஆட்டங்களில் வென்றுள்ளது. ஆனால் தொடரை கைப்பற்றவில்லை. இந்த குறைபாடு தற்போது நீங்குகிறது.
 புஜாரா, கோலி, ஹனுமா, ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் போன்றோரின் அபாரமான பேட்டிங், இஷாந்த், பும்ரா, சமி, அஸ்வின், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு இணைந்து ஆஸி. அணியை நிலைகுலையச் செய்தது.
 பெர்த் டெஸ்டில் பிட்சின் தன்மையை பயன்படுத்தி 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வென்றிருந்தது. ஆனால் அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னியில் இந்தியாவின் ஆதிக்கமே நிறைந்திருந்தது.
 ஆஸி. அணிக்கு பாண்டிங் கண்டனம்
 சிட்னி டெஸ்ட் சென்று கொண்டிருக்கும் சூழலில் விரக்தியை கூட வெளிப்படுத்தாமல் உள்ளனர் என ஆஸி. அணியினருக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆஸி. வீரர் நாதன் லயன் எல்பிடபிள்யு முறையில் அவுட்டானதாக நடுவர் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த லயன், எதிர் முனையில் இருந்த ஸ்டார்க்கிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டார். இரு முறையீடுகள் இருந்த நிலையிலும் இருவரும் அதைக் கோரவில்லை.
 இந்த அவுட் ஆஸி. அணியின் மனநிலையை எனக்கு எடுத்துரைக்கிறது. விரக்தியை கூட வெளிப்படுத்தவில்லை. நடுவர் தீர்ப்பில் சிறிது சந்தேகமாவது எழ வேண்டும்.
 கூட்டாக ஆடும் போது, இருவரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். ஆனால் ஸ்டார்க் இதில் தனது பொறுப்பை தட்டிக்கழித்தார் என்றார் பாண்டிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com