சுடச்சுட

  

  சிறப்பாக விளையாடிய நடுவரிசை வீரர்கள்: 288 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணி!

  By DIN  |   Published on : 12th January 2019 11:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Khawaja,_Marsh

   

  இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 288 ரன்கள் எடுத்துள்ளது. 

  சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

  ஆஸி. அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஃபிஞ்சை 6 ரன்களில் போல்ட் செய்தார் புவனேஸ்வர் குமார். விக்கெட் கீப்பர் கேரி நன்குத் தொடங்கினார். ஆனால், 24 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, கவாஜாவும் ஷான் மார்ஷும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். 22.5 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது ஆஸ்திரேலிய அணி. 70 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த கவாஜா, 59 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

  நன்கு விளையாடிய மார்ஷ், 65 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆனால் அதன்பிறகு சிக்ஸ் அடிக்க முயன்று குல்தீப் யாதவ் பந்துவீச்சில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு அடுத்த 10 ஓவர்களுக்கு ஹேண்ட்ஸ்காம்பும் ஸ்டாய்னிஸூம் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும் சிறிது நேரம் பவுண்டரிகள் எதுவும் அடிக்காமல் ஆடினார்கள். குல்தீப் வீசிய 44-வது ஓவரில் ஸ்டாய்னிஸும் ஹேண்ட்ஸ்காம்பும் தலா ஒரு சிக்ஸர் அடித்தார்கள். அப்போது 45 பந்துகளுக்குப் பிறகுதான் ஒரு பவுண்டரி அடித்தது ஆஸ்திரேலியா. 50 பந்துகளில் அரை சதமெடுத்த ஹேண்ட்ஸ்காம்ப், சதமடிப்பார் என்கிற எதிர்பார்ப்பை உண்டு பண்ணினார். ஆனால் அவர் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்களில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

  கடைசிக்கட்டத்தில் ஸ்டாய்னிஸும் மேக்ஸ்வெல்லும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் ஆஸி. அணிக்கு கடைசி 5 ஓவர்களில் 59 ரன்கள் கிடைத்தன. ஸ்டாய்னிஸ் 43 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ரன்களும் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் புவனேஸ்வர், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

  TAGS
  Australia
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai