அறிமுக ஆண்டிலேயே ஐசிசி விருது: அசத்தும் ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிமுகமான ஆண்டிலேயே ஐசிசி விருதைப் பெற்று அசத்தியுள்ளார்.
அறிமுக ஆண்டிலேயே ஐசிசி விருது: அசத்தும் ரிஷப் பண்ட்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அறிமுகமான ஆண்டிலேயே ஐசிசி விருதைப் பெற்று அசத்தியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மகேந்திர சிங் தோனியின் ஓய்வுக்குப் பிறகு விக்கெட் கீப்பருக்கான இடத்துக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், பார்திவ் படேல் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், மெச்சும்படியான ஆட்டத்தை அவர்கள் வெளிப்படுத்த தவறினர். மேலும் இருவரும் 30 வயதைக் கடந்தவர்கள்.

இதனால் நீண்டகால தேவைக்கு ஏற்ப அடுத்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்யும் தேடலில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தீவிரம் காட்டியது. இதையடுத்து இளம் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட்-க்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்கி சதம் விளாசினார். பின்னர் மே.இ.தீவுகளுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது இருமுறை 92 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

அதிரடி ஆட்டத்தாலும், கீப்பிங்கில் சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த அணியுடனான கடைசி டெஸ்டில் அதிரடியாக ஆடி 159 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் கீப்பிங்கிலும் இதுவரை 40 கேட்சுகளைப் பிடித்துள்ளார், 2 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். இங்கிலாந்தில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், ஒரே டெஸ்டில் அதிக கேட்சுகள் (11) பிடித்ததற்கான சாதனையை சமன் செய்துள்ளார். 

2018-ஆம் ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட், 696 ரன்கள் எடுத்தார். மேலும் 3 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளிலும் விளையாடினார். இவரது ஆட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த எமர்ஜிங் (வளர்ந்து வரும்) வீரருக்கான ஐசிசி விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com