வெயில் காரணமாக நின்ற ஆட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்?

வெயில் காரணமாக இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வெயில் காரணமாக நின்ற ஆட்டம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்?

வெயில் காரணமாக இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் உள்ள மெக்ளேரன் பார்க் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 64 ரன்கள் சேர்த்தார். இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 3, சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது வெயில் காரணமாக ஆட்டம் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கள நடுவர்கள் அறிவித்தனர். 

மாலைப் பொழுது என்பதால் சூரியன் பேட்ஸ்மேன்களின் கண்களில் நேரடியாகப்படுகிறது. இதனால் அவர்களால் பந்தை சரியாக கணிக்க முடியவில்லை. எனவே வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. எனது 14 வருட கிரிக்கெட் வாழ்வில் இதுபோன்று நடைபெறுவதும் இதுதான் முதல்முறை. கூடுதலாக 30 நிமிடங்கள் இருப்பதால், இந்த ஆட்டம் 50 ஓவர்களாகவே நடைபெறும் என்று கள நடுவர்களில் ஒருவரான ஷான் ஹெய்க் விளக்கமளித்தார்.

பொதுவாக இதுபோன்ற சூழலை தடுக்க பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்கள் வடக்கு - தெற்கு திசைகளை நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், மெக்ளேரன் பார்க் மைதானம் கிழக்கு - மேற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சூழல் ஏற்பட்டுள்ளது. 

மழையால் எத்தனையோ ஆட்டங்கள் தடைப்பட்டும், தற்காலிகமாக நிறுத்தப்படுவதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், வெயில் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது சமீபகாலங்களில் அநேகமாக இதுவே முதல்முறையாக அமைந்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com