நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முச்சத நாயகன்!

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முச்சத நாயகன்!
Updated on
1 min read

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார் கருண் நாயர் (27). இவர் 2016-ஆம் ஆண்டில் இங்கிலாந்து எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் குவித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் வீரேந்திர சேவாக்குக்கு அடுத்து முச்சதம் விளாசிய 2-ஆவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான சனயா தகரிவாலா உடன் கருண் நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் உறுதிபடுத்தினார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com