என்சிஏ தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்: ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ) தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்கிறார்.
என்சிஏ தலைவராக ராகுல் டிராவிட் நியமனம்: ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்சிஏ) தலைவராக முன்னாள் கேப்டனும், இந்தியா ஏ மற்றும் 19 வயது இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பொறுப்பேற்கிறார்.

முன்னதாக, என்சிஏ-வின் புதிய தலைவராக ராகுல் டிராவிட்டை 2 ஆண்டுக் காலத்துக்கு நியமித்து சிஓஏ குழு உத்தரவிட்டது. ஆனால், முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவராக இருந்த என்.ஸ்ரீநிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட், ஊதியம் பெரும் ஊழியராக ஒப்பந்தம் உள்ளதால் இதில் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், தேசிய கிரிக்கெட் அகாதெமியின் பதவிக்காலம் வரை இந்தியா சிமெண்ட்ஸ் பணியிலிருந்து ராகுல் டிராவிட் காலவரையற்ற விடுப்பு எடுத்துள்ளதால் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி பிரச்னை நீங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் என்சிஏ தலைவராக ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளின் போட்டிகளுக்கு டிராவிட்டால் செல்ல முடியாத நிலை ஏற்படும்போது பராஸ் மாம்பரே, அபய் சர்மா ஆகிய இருவரும் இரு அணிகளையும் தற்காலிகமாக கையாள்வர் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com