சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷோயப் மாலிக் ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் (37) வெள்ளிக்கிழமை அறிவித்தார். 
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஷோயப் மாலிக் ஓய்வு

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக் (37) வெள்ளிக்கிழமை அறிவித்தார். வங்கதேசத்துடனான கடைசி உலகக் கோப்பை லீக் ஆட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாலிக் கூறியதாவது,

2019 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் கடைசி ஆட்டத்தோடு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்திருந்தேன். இது பல வருடங்களாக நான் திட்டமிட்டு எடுத்த முடிவு. நான் மிகவும் விரும்பிய ஒருநாள் போட்டிகளில் இருந்து இத்துடன் ஓய்வு பெறுகிறேன். 

எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை நான் எடுத்துள்ளேன். அதுபோன்று டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். 2020-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியில் நிச்சயம் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன். 

இந்த 20 ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டு வாரியம், பயிற்சியாளர்கள், சக அணி வீரர்கள், ஊடகம், எனது விளம்பரதாரர் மற்றும் எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மொத்தம் 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷோயப் மாலிக் 7,500 ரன்களும், 158 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இவரது ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 3 போட்டிகளில் மட்டுமே இடம்பிடித்த மாலிக் 2 முறை டக்-அவுட்டானார், ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com