புரோ கபடி லீக் 2019: அணிகள் ஒரு பார்வை - 2

சீசன்5-இல் புதிதாக அறிமுகமான அணி யுபி யோத்தா. 5, 6-ஆவது சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்த ஆட்டங்கள் 48-இல் 18 வெற்றி, 22 தோல்வியை கண்டுள்ளது 8 ஆட்டங்கள் சமனில் முடிந்தன.
புரோ கபடி லீக் 2019: அணிகள் ஒரு பார்வை - 2


யுபி-யோத்தா: சீசன்5-இல் புதிதாக அறிமுகமான அணி யுபி யோத்தா. 5, 6-ஆவது சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்த ஆட்டங்கள் 48-இல் 18 வெற்றி, 22 தோல்வியை கண்டுள்ளது 8 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. முக்கிய வீரர்கள் மோனு கோயட், ரிஷாங் தேவதிகா, காந்த் ஜாதவ், நிதிஷ் குமார், சச்சின் குமார், நரேந்தர். அமித்.

அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு வாங்கப்பட்டார் மோனு கோயட். அதே போல் காந்த் ஜாதவ் ரூ. 68 லட்சத்துக்கும், ரிஷாங் தேவதிகா ரூ. 61 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனர். 

பலம்-சிறந்த ரைடர்கள் 3 பேரை கொண்டுள்ளது. ஜீவகுமார் சென்றதால் தற்காப்பு பலவீனமாக உள்ளது. 

பெங்கால் வாரியர்ஸ்: அனைத்து சீசன்களிலும் ஆடியுள்ளது. முதலிரண்டு சீசன்களில் பெரிய வெற்றிகளை குவிக்கவில்லை. 3-ஆவது சீசனில் அரையிறுதியில் தோல்வி கண்டது. 5, 6--ஆவது சீசன்களில் பிளே ஆஃப் சுற்றில் எதையும் வெல்லவில்லை.

மொத்தம் 105 ஆட்டங்களில் 43 வெற்றி, 50 தோல்விகளை பெற்றுள்ளது. 12 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. நட்சத்திர வீரர் மணீந்தர் சிங் ((ரைடர்ஸ்). இதர முக்கிய வீரர்கள் ஜீவகுமார், பிரபஞ்சன், பல்தேவ், விஜின் தங்கதுரை, ராகேஷ் நர்வால்.

அதிகபட்சமாக ரூ.78 லட்சம் தந்து தக்க வைக்கப்பட்டவர் மணீந்தர் சிங். கே.பிரபஞ்சன் ரூ. 55 லட்சம், ஜீவகுமார் ரூ. 31 லட்சம். 

பெங்களூரு புல்ஸ்: கடந்த சீசனில் முதல் பட்டத்தை வென்றது பெங்களூரு புல்ஸ். இரண்டாவது சீசனில் ரன்னர் அப்பாக வந்தனர். மொத்தம் 104 ஆட்டங்களில் 46 வெற்றி, 51 தோல்விகளை கண்டது 7 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. நட்சத்திர வீரர் ரோஹித் குமார் இதர முக்கிய வீரர்கள்-பவன் செஹ்ராவத், மஹேந்தர் சிங், ஆஷிஷ் சங்வான், அமித் ஷிரோன், சுமித் சிங் ராஜு லால்.

அதிகபட்சமாக ரோஹித் குமார் ரூ.98 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டார் பவாôன் செஹ்ராவத் ரூ.78 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டார். மஹேந்தர் சிங் ரூ.80 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். பலம்--சிறந்த ரைடர்களைக் கொண்டுள்ளது. பலவீனம்-தற்காப்பில் போதிய அனுபவம், இல்லாதது.

தில்லி தபாங்: முதன்முறையாக கடந்த 6-ஆவது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்தம் 102 ஆட்டங்களில் 31 வெற்றி, 64 தோல்விகளை கண்டுள்ளது. 7 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. நட்சத்திர வீரர் ஜோகிந்தர் நர்வால் இதர முக்கிய வீரர்கள் மிரஜ் ஷேக், ரவீந்தர் பஹால், விஷால் மானே, சந்திரன் ரஞ்சித், அனில்குமார், நவீன்குமார்.அதிகபட்சமாக மீரஜ் ஷேக் ரூ. 72 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டார் ரூ. 70 லட்சத்துக்கு சந்திரன் ரஞ்சித், ரூ. 61 லட்சத்துக்கு ரவீந்தர் பஹாலும் வாங்கப்பட்டனர்.

பலம்-அனுபவம் மற்றும் புரிந்துணர்வு உள்ள வீரர்கள் பலவீனம்-தற்காப்பு வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்படாதது. 

குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்: 5-ஆவது சீசன் முதல் பங்கேற்று வரும் குஜராத் அணி 2 சீசன்களிலும் இறுதி சுற்றில் தோல்வியடைந்தது. மொத்த ஆட்டங்கள் 44-இல் 32 வெற்றி, 7 தோல்வியை கண்டுள்ளது. 5 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. பயிற்சியாளர் மன்ப்ரீத் சிங் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது நட்சத்திர வீரர் சச்சின் தன்வர். இதர முக்கிய வீரர்கள்-பங்கஜ், ரோஹித் குலியா, பர்வேஷ் பனிஸ்வால், சுனில்குமார், வினோத்குமார், ருதுராஜ்.

சச்சின் தன்வர் ரூ.78 லட்சம், பர்வேஷ் பனிஸ்வால் ரூ. 75 லட்சத்துக்கும், சுனில்குமார் ரூ. 67 லட்சத்துக்கும் தக்க வைக்கப்பட்டனர். 

பலம்-சிறந்த தற்காப்பு, பலவீனம்-கார்னர் தற்காப்பில் போதிய அனுபவம் இல்லாதது. சிறந்த துணை ரைடர்கள் இல்லாமை. 

ஹரியாணா ஸ்டீலர்ஸ்: கடந்த 5-ஆவது சீசனில் இணைந்த புதிய அணி ஹரியாணா. அதே சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. மொத்தம் 45 ஆட்டங்களில் 19 வெற்றி, 20 தோல்விகளை கண்டுள்ளது. 6 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. நட்சத்திர வீரர் குல்தீப் சிங். 

இதர முக்கிய வீரர்கள்-குல்தீப் சிங், பிரசாந்த் குமார் ராய், பர்வீன், நவீன், ரவிக்குமார், விகாஸ் கண்டூலா, தர்மராஜ் சேரலாதன். அதிகபட்சமாக ரூ.77.6 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டவர் விகாஸ் கண்டுலா. பிரசாந்த் குமார் ரூ.77 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

பலம்-சிறந்த ரைடிங் பிரிவு, போனஸ் புள்ளிகளை அதிகம் குவிப்பது. பலவீனம்-அனுபவமில்லாத தற்காப்பு. 

நிறைவு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com