விருப்பத்துடன் கூடிய உறவு? பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ரொனால்டோ விடுவிப்பு

பாலியல் குற்றச்சாட்டில் இருந்து கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். 
விருப்பத்துடன் கூடிய உறவு? பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ரொனால்டோ விடுவிப்பு
Updated on
1 min read

போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் பாலியல் குற்றச்சாட்டில் இருந்து போர்ச்சுகல்லைச் சேர்ந்த பிரபல நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ திங்கள்கிழமை விடுவிக்கப்பட்டார். 

கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் மையோர்கா லாஸ் வேகாஸில் உள்ள விடுதி ஒன்றில் ரொனால்டோ தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டினார். 

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் கிறிஸ்டியானோ ரொனால்டோ விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் திங்கள்கிழமை அறிவித்தது.

பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் ரொனால்டோ தரப்பு, அது இருதரப்பின் விருப்பத்துடன் கூடிய உறவு தான் என்றும் தொடர்ந்து தெரிவித்து வந்தது. ஆனால், தன்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு மிரட்டியதாக கேத்ரின் மையோர்கா தரப்பில் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com