மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது: ரிஷப் பண்ட்

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு ஏற்பட்டிருப்பதாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (21) தெரிவித்தார். 
மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டியுள்ளது: ரிஷப் பண்ட்

இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய பொறுப்பு தனக்கு ஏற்பட்டிருப்பதாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (21) தெரிவித்தார். மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி போன்ற மூத்த வீரர் இல்லாத நிலையில், விக்கெட் கீப்பராக இடம்பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதுகுறித்து நான் சிந்தித்துக்கொண்டிருந்தால் என்னால் சிறப்பாக செயல்பட முடியாது. அதுமட்டுமல்லாமல் எனது ஆட்டம் குறித்து ரசிகர்களின் விமர்சனங்கள் தொடர்பாகவும் நான் சிந்திக்கப்போவதில்லை. 

எனது ஆட்டத்தில் மட்டுமே முழுக் கவனம் செலுத்தி வருகிறேன். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட விரும்புகிறேன். எனக்கெதிரான சவால்களை நேர்மறையாக எடுத்துக்கொள்கிறேன். எனக்கு ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வேன். அதன்மூலம் மேம்படுவதற்கு முயற்சிப்பேன். தற்போதைய அணியில் யாரிடம் வேண்டுமானாலும் உதவியை பெற முடியும். மேலும் உங்களின் பங்களிப்பையும் தைரியமாக வெளிப்படுத்த முடியும். 

கேப்டன் விராட் கோலி அனைவரின் சிந்தனைகளுக்கும் இடமளிப்பார். அவரிடம் தான் ஒரு கேப்டன் மற்றும் மூத்த வீரர் போன்ற கர்வம் இருக்காது. இதுவே இளைய வீரர்களுக்கு அதிக தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். விராட் கோலியின் இந்த அணுகுமுறை எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மூத்த வீரர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படும் போது இளம் வீரர்களுக்கு நிறை அனுபவம் கிடைக்கிறது. 

ஆட்டத்தின் போக்கை சரியாக கணிப்பதில் தோனி சிறந்தவர். இக்கட்டான நிலையிலும் அமைதியுடன் செயல்படுவதில் வல்லவர். அவரிடம் கற்க நிறைய உள்ளன. களத்தின் வெளியே கூட உதவிகரமாக இருக்கக்கூடியவர் மகேந்திர சிங் தோனி என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com