செய்திகள் சில வரிகளில்...
By DIN | Published On : 27th July 2019 02:46 AM | Last Updated : 27th July 2019 02:46 AM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோதும் மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் அறிவித்தார்.
ஆசிய ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் இருபால் இரட்டையர் அணி தோல்வி கண்டது.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் யு மும்பா 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸை வென்றது.
பிசிசிஐ-யின் மாநில கிரிக்கெட் சங்கங்களில் ஒன்றாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு சண்டீகர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2020, 2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவின் வியூகங்களை வகுப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தலைமையில் 10 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் பொதுச் சபையிலிருந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியேறியது.
தாய்லாந்து குத்துச்சண்டை போட்டியில் நிகத் ஜரின், தீபக் சிங், ஆஷிஷ் குமார், முகமது ஹஸாமுதின், பிரிஜேஷ் யாதவ் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான பக்தி குல்கர்னி சாம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார்.
ஆர்ஜெண்டீனா குத்துச்சண்டைப் போட்டியில் உருகுவேயின் எட்வார்டோ அப்ரியுவுடன் மோதிய ஆர்ஜெண்டீனாவின் ஹியூகோ சான்டிலான் காயம் காரணமாக மரணமடைந்தார்.
அக்டோபரில் தொடங்கும் இந்திய பாக்ஸிங் லீக் போட்டியில் மேரி கோம், அமித் பங்கால் களம் காண்கின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தனது பதவியை தக்கவைத்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிகிறது.
12-ஆவது தேசிய சக்கர நாற்காலி வாள்வீச்சுப் போட்டியும், 8-ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியும் சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்களில் இம்மாதம் 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...