1,000 ரன்கள், 100 விக்கெட்டுகளுடன் ஆஸி. வீராங்கனை புது சாதனை!
By Raghavendran | Published On : 29th July 2019 12:42 PM | Last Updated : 30th July 2019 12:49 PM | அ+அ அ- |

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையிலான மகளிர் ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்த பெர்ரி, ஆஸி. அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்நிலையில், டி20 போட்டிகளில் 1,000 ரன்கள் குவித்தும், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி (28) படைத்தார்.
இதுகுறித்து எல்லிஸ் பெர்ரி கூறுகையில், நான் இச்சாதனையைப் படைப்பேன் என்று நிச்சயம் தெரியாது. டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் ஆடவருக்கு இணையாக மகளிரும் விளையாடுகின்றனர். டி20 நானும் எனது முழுப் பங்களிப்பை அளித்து வருகிறேன். நான் சுமாராக 100 போட்டிகளில் பங்கேற்று விட்டேன். அதனால் தான் என்னால் இச்சாதனையை செய்ய முடிந்தது என்றார்.
ஷாஹித் அஃப்ரிடி (1416 ரன்கள், 98 விக்கெட்டுகள்) 2-ஆவது இடத்திலும், ஷகிப்-அல்-ஹசன் (1471 ரன்கள், 88 விக்கெட்டுகள்) 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.