இந்திய அணிக்குத் தேர்வான இளம் வீரரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

ஐபிஎல்-லில் முத்திரை பதித்த மார்கண்டே, இந்திய அணிக்குத் தேர்வாகி, ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடினார்... 
இந்திய அணிக்குத் தேர்வான இளம் வீரரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

2018 ஐபிஎல் போட்டியில் மயங்க் மார்கண்டேவின் பங்களிப்பை யாராலும் மறக்கமுடியாது. ஐபிஎல் போட்டிக்கு அறிமுகமான மார்கண்டே, மும்பை அணி விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் விளையாடினார். 14 ஆட்டங்களில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் இந்த வருடம் மும்பை அணி மார்கண்டேவுக்குப் பதிலாக ராகுல் சஹாருக்கு முன்னுரிமை அளித்தது. இதனால் மார்கண்டே 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். 

ஐபிஎல்-லில் முத்திரை பதித்த மார்கண்டே, இந்திய அணிக்குத் தேர்வாகி, ஒரு டி20 ஆட்டத்தில் விளையாடினார். இந்நிலையில் மயங்க் மார்கண்டேவை தில்லி அணிக்கு கைமாற்றியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. தில்லி கேபிடல்ஸ் அணியில் ஏற்கெனவே அமித் மிஸ்ரா, சந்தீப் லமிச்சனே, ராகுல் டெவாட்டியா என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். 

இந்நிலையில் மார்கண்டேவுக்குப் பதிலாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஷெர்ஃபான் ரூதர்போர்டைத் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ். கடந்த ஏலத்தில் ரூதர்போர்டை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com