ஆப்கானிஸ்தான் 172 ஆல் அவுட்

நியூஸிலாந்தின் நீஷம், பெர்குஸன் ஆகியோரின் அபார வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆப்கானிஸ்தான் 172 ஆல் அவுட்

நியூஸிலாந்தின் நீஷம், பெர்குஸன் ஆகியோரின் அபார வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஆப்கானிஸ்தான் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 இரு அணிகள் இடையிலான ஆட்டம் டான்டன் கவுண்டி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
 இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.
 ஆப்கன் தரப்பில் ஹஸ்ரத்துல்லா ஸஸாய்-நூர் அலி ஸட்ரன் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில் 10-ஆவது ஓவரில் ஸ்கோர் 60-ஐ கடந்தது. ஹஸ்ரத்துல்லா 34, நூர் அலி ஸட்ரன் 31 ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினர். ரஹ்மத் ஷா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டானார்.
 கேப்டன் குல்பதீன் நைப் 4 ரன்களுடன் ஜேம்ஸ் நீஷம் பந்துவீச்சில் அவுட்டானார்.
 22.2 ஆவது ஓவரின் போது திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. முகமது நபி 9, நஜிபுல்லா ஸட்ரன் 4, இக்ரம் அலிகில் 2, ரஷித் கான் 0 என சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். அப்தாப் ஆலம் 14 ரன்களுடன் பெர்குஸன் பந்தில் வெளியேறினார்.
 ஹஸ்மத்துல்லா 99 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து அவுட்டானார். ஹமீது ஹாசன் 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 இறுதியில் 41.1 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கானிஸ்தான்.
 நீஷம் 5 விக்கெட்: நியூஸி தரப்பில் ஜேம்ஸ் நீஷம் அபாரமாக பந்து வீசி 5-31 விக்கெட்டையும், லாக்கி பெர்குஸன் 4-37 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com