இந்திய அணிக்கு லண்டன் தூதரகத்தில் வரவேற்பு
By DIN | Published On : 09th June 2019 01:55 AM | Last Updated : 09th June 2019 01:55 AM | அ+அ அ- |

உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு, லண்டனில் உள்ள இந்திய தூதர் ருச்சி கான்ஷியாம் வரவேற்பு விருந்தளித்தார்.
ஆஸி.யுடன் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஆட்டத்தில் ஆடவுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டது இந்திய அணி. ஆனால் தொடர் மழையால் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய தூதரின் அதிகாரபூர்வ இல்லத்தில் கோலி, ரவிசாஸ்திரி மற்றும் வீரர்கள் பாரம்பரிய இந்திய உடை அணிந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.