உலக சாம்பியன் ஆஸி.யின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

உலக சாம்பியன் ஆ,ஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக சாம்பியன் ஆஸி.யின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா?

உலக சாம்பியன் ஆ,ஸ்திரேலிய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா தற்போது 6-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது. கடந்த ஓராண்டாக ஒருநாள் ஆட்டங்களில் மோசமாக ஆடி வந்த ஆஸி. தற்போது ஸ்மித், வார்னர் வருகையால் மேலும் பலம் பெற்றுள்ளது.
 பேட்டிங்கில் ஆரோன் பின்ச், காஜா, ஸ்டாஸ்னிஸ், வார்னர், ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
 அந்த அணியின் பவுலிங்கும் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, ஸ்டாய்னிஸ் ஆகியோரால் பலத்துடன் உள்ளது. முதல் ஆட்டத்தில் ஆப்கனை எளிதாக வீழ்த்திய ஆஸி, இரண்டாவது ஆட்டத்தில், மே.இ.தீவுகளை போராடி வென்று 2 வெற்றிகளுடன் உற்சாகமாக உள்ளது
 ஆஸ்திரேலியா. டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் கடும் சவாலை சமாளித்து வென்றது ஆஸி. தொடர்ந்து 10 ஒரு நாள் ஆட்டங்களில் வென்ற சிறப்பை பெற்றுள்ளது ஆஸி.
 3-ஆவது பட்டத்தை கைப்பற்ற இந்தியா தீவிரம்
 ஐசிசி ஒருநாள் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்துக்கு அடுத்து 2-ஆவது இடத்தில் உள்ளது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி. முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தன்னம்பிக்கையுடன் உள்ளது.
 இரு அணிகள் இடையிலான ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி தனது இருப்பை வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா, சஹல் ஆகியோர் சிறப்பாக வீசி எதிரணியை நிலைகுலையச் செய்தனர்.
 கோலிக்கு கூடுதல் பொறுப்பு
 சஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தென்னாப்பிரிக்க பேட்டிங்கை சரித்து விட்டனர். மிடில் ஆர்டரில் கேஎல். ராகுல் பொறுப்பாக ஆடினார். முதல் ஆட்டத்தில் ஷிகர் தவன், கோலி சோபிக்கவில்லை.
 ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலை கோலிக்கு உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒருநாள் ஆட்டங்களில் நெடிய வரலாறு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 136 ஆட்டங்களில் மோதியுள்ளன. ஆஸி. 77, இந்தியா 49 ஆட்டங்களில் வென்றுள்ளன. ஓவல் மைதானத்தில் விட்டு விட்டு மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் இரண்டாவதாக பேட்டிங் செய்வது கடினமானதாக உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றியை, தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக டாஸ் இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக மைதானம் ஒத்துழைக்கும்.
 இன்றைய ஆட்டம்
 ஆஸி.-இந்தியா, இடம்: லண்டன், நேரம்: மதியம் 3.00.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com