துளிகள்...
By DIN | Published On : 09th June 2019 01:50 AM | Last Updated : 09th June 2019 01:50 AM | அ+அ அ- |

*தாய்லாந்தின் புரிராம் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 4 நாடுகள் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வென்று இந்திய அணி 3-ஆவது இடத்தைப் பெற்றது. குரோஷியாவின் இகோர் ஸ்டிமாக் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
*இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள உலகக் குத்துச்சண்டை சாம்பியன் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இத்தாலி, அயர்லாந்து, கொரியாவில் பயிற்சி ஆட்டம் மற்றும் நவீன பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
*இந்தியா சீனியர் ஹாக்கி அணி வீரர்கள் மனதளவில் வலுவுடன் திகழ, புதிய மனோ தத்துவ நிபுணரை நியமிக்க வேண்டும் என தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் வலியுறுத்தியுள்ளார்.
*கோபா அமெரிக்கா போட்டிக்கு தயாராகும் வகையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் சனிக்கிழமை நிகரகுவா அணியுடன் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் மெஸ்ஸியின் அபார 2 கோல்கள் உள்பட 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஆர்ஜென்டீனா.
*புவனேசுவரத்தில் நடைபெற்று வரும் ஆடவர் எப்ஐஎச் ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் போட்டியில் சனிக்கிழமை அமெரிக்க அணி அபாரமாக ஆடி 9-0 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை நொறுக்கியது.
*சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவியை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் தொடர்பாக புதிய மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜுவுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார் இந்தியா ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் ராஜிவ் மேத்தா. கடந்த பிப்ரவரி மாதம் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கற்க பாக். அணிக்கு விசா தரப்படாததால், ஐஓசி இத்தடையை விதித்தது.