சுடச்சுட

  

  உலக கோப்பை: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

  By DIN  |   Published on : 14th June 2019 10:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  eng


  உலக கோப்பை கிரிக்கெட் பேட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 19-வது லீக்  ஆட்டத்தில்  இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
  போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
   இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக  கிறிஸ் கெய்ல் மற்றும் இவின் லீவிஸ் களமிறங்கினர்.
  இவர்களில்  இவின் லீவிஸ் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்மிழந்தார்.  கிறிஸ் கெய்ல் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தார். பின் ஷாய் ஹோப் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அணியில் அதிகபட்சமாக  நிகோலஸ் பூரன் அரைசதம் கடந்து 63 ரன்களை எடுத்தார். மேலும் ஹெட்மயர் 39, ஜேசன் ஹோல்டர் 9,  ரஸ்ஸல் 21, ப்ராத்வெய்ட் 14 ரன்கள் எடுத்தனர். அணியில் ஷெல்டன் கோட்ரெல், ஷானோன் கேப்ரியல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர் இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும்  இழந்து 212 ரன்களை எடுத்தது.
  இங்கிலாந்து அணி சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர மற்றும் மார்க்வுட்  தலா 3 விக்கெட்களும், ஜோ ரூட்  2 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிளங்கெட் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

  பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 33.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பில் இலக்கைஅடைந்து வெற்றி பெற்றது.
  இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டகாரகளான ஜோ ரூட் 100 ரன்களும்,  பேர்ஸ்டோவ் 45 ரன்களும் எடுத்தனர். மேலும் கிறிஸ் வோகஸ் 40, பென்  ஸ்டோக்ஸ் 10 ரன்களும் எடுத்து வெற்றி இலக்கை எட்டினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகளில் விளையாடியுள்ள  இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai