தவன் குணமடைய 10 நாள்கள் ஆகலாம் எனத் தகவல்
By DIN | Published On : 14th June 2019 01:04 AM | Last Updated : 14th June 2019 01:04 AM | அ+அ அ- |

காயமடைந்த இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவன் குணமடைய 10 நாள்கள் ஆகலாம் என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தின் போது இடதுகை பெருவிரலில் முறிவு ஏற்பட்டதால் காயமடைந்தார். இதனால் 3 ஆட்டங்களில் அவரால் ஆட முடியாது என அறிவிக்கப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு பதிலாக பதிலி வீரராக ரிஷப் பந்த் அழைக்கப்பட்டுள்ளார்.
சஞ்சய் பாங்கர் கூறியதாவது-தவன் குணமடைய 10 முதல் 12 நாள்கள் ஆகலாம். அதுவரை நல்ல பதிலி வீரர் வைத்து நிலைமைய சமாளிப்போம். ஷிகர் தவன் போன்ற சிறந்த வீரரை இத்தருணத்தில் இழக்க விரும்பவில்லை என்றார்.