இங்கிலாந்தை வீழ்த்துமா மே.இ.தீவுகள்?: இன்று மோதல்

முதன்முறையாக பட்டம் வெல்லத் துடிக்கும் இங்கிலாந்தும், பாரம்பரிய பெருமையை மீட்க போராடும் மே.இ.தீவுகளும் வெள்ளிக்கிழமை செளதாம்ப்டன் ரோஸ்பவுலில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.
இங்கிலாந்தை வீழ்த்துமா மே.இ.தீவுகள்?: இன்று மோதல்


முதன்முறையாக பட்டம் வெல்லத் துடிக்கும் இங்கிலாந்தும், பாரம்பரிய பெருமையை மீட்க போராடும் மே.இ.தீவுகளும் வெள்ளிக்கிழமை செளதாம்ப்டன் ரோஸ்பவுலில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் மோதுகின்றன.
புள்ளிகள் பட்டியலில் இங்கிலாந்து 4-ஆவது இடத்திலும், மே.இ.தீவுகள் 6-ஆவது இடத்திலும் உள்ளன. உலகக் கோப்பை ஆட்ட வரலாற்றில் மொத்தம் 6 ஆட்டங்களில் இங்கிலாந்து 5-இலும், மே.இ.தீவுகள் ஒன்றிலும் வென்றுள்ளன. அதே நேரத்தில் 1979 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது மே.இ.தீவுகள்.
இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு தகுதி பெறும் பயணத்தில் இந்த ஆட்டம் முக்கியமானதாகும். தற்போதைய இங்கிலாந்து அணி பேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிகவும் வலுவாக காணப்படுகிறது. பட்டம் வெல்லும் அணிகளில் முதன்மையாக கணிக்கப்பட்டுள்ளது. பேட்டிங்கில் ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஜேஸன் ராய், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொர்கன், என வலுவான வரிசை உள்ளது. பவுலிங்கிலும் லியாம் பிளங்கட், ஜோப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, ஆதில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர்.
மே.இ.தீவுகள்: மே.இ.தீவுகள் அணி பேட்டிங்கில் அதிரடி வீரர்கள் கிறிஸ் கெயில், பிராவோ, ரஸ்ஸல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், எவின் லெவிஸ், ஜேஸன் ஹோல்டர் ஆகியோரை நம்பி உள்ளது. பவுலிங்கைப் பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே காணப்படுகிறது. இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய ஆட்டம்
இங்கிலாந்து-மே.இ.தீவுகள், 
இடம்: சௌதாம்ப்டன், நேரம்: மதியம் 3.00.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com