எடுத்ததோ 6 ரன்கள்! அதில் அடித்ததோ ஒரு ரன்! இப்படியொரு டி20-ஐ பார்த்திருக்கிறீர்களா?

டி20 ஆட்டத்தில் ஒரு அணி வெறும் 6 ரன்களுக்குச் சுருண்ட சம்பவம் செவ்வாய்கிழமை நடந்துள்ளது. 
எடுத்ததோ 6 ரன்கள்! அதில் அடித்ததோ ஒரு ரன்! இப்படியொரு டி20-ஐ பார்த்திருக்கிறீர்களா?

மகளிர் கிரிக்கெட் டி20 ஆட்டத்தில் ஒரு அணி வெறும் 6 ரன்களுக்குச் சுருண்ட சம்பவம் செவ்வாய்கிழமை நடந்துள்ளது. வாண்டான் தலைநகர் கிகாலி நகரில் நடைபெறும் விபூகா மகளிர் டி20 தொடரில் வாண்டா, மாலி அணிகள் மோதின.

இதில் மாலி அணி 9 ஓவர்கள் விளையாடியும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதிலும் ஒரு ரன் மட்டுமே துவக்க பேட்ஸ்வுமன் மரியம் சமகே பேட் மூலம் அடித்து எடுக்கப்பட்டது. இதர வீராங்கனைகள் அனைவரும் டக்-அவுட் உடன் பெவிலியன் திரும்ப, மீதமுள்ள 5 ரன்களும் உதிரி மூலம் கிடைத்ததே.  

பின்னர் பேட் செய்ய வந்த வாண்டா அணி 4 பந்துகளில் வெற்றி இலக்கை அடைந்தது. இதன்மூலம் அதிக பந்துகள் வித்தியாசத்தில் (116 பந்துகள்) வெற்றிபெற்ற அணி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையையும் பதிவு செய்தது. 

முன்னதாக, பாங்காங்கில் நடந்த டி20 போட்டியில் சீன மகளிர் அணி 14 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே இதுவரை குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. 

இதன்மூலம் அதிக ரன்கள் வித்தியாசத்தில் (189 ரன்கள்) வெற்றிபெற்ற அணி என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com