இந்த இணை உலகக் கோப்பைக்கு பின்னரும் இப்படியே தொடர வேண்டும்: ஹர்பஜன் சிங்

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்பும் இந்த பந்துவீச்சு இணை இதேபோன்று தொடர வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறினார். 
இந்த இணை உலகக் கோப்பைக்கு பின்னரும் இப்படியே தொடர வேண்டும்: ஹர்பஜன் சிங்

உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்பும் இந்த பந்துவீச்சு இணை இதேபோன்று தொடர வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளது. எனவே இந்திய அணியை வெற்றிகொள்ள இதர அணிகள் கடும் முயற்சி செய்ய வேண்டும். 

அதுபோன்று உடல் தகுதியிலும் இந்திய அணி சிறந்து விளங்குகிறது. அதனால் ஃபீல்டிங்கும் சிறப்பாக உள்ளது. இந்த புகழ் எல்லாம் விராட் கோலியை தான் சேரும். ஏனென்றால் அவர் தான் இதில் தனித்துவத்தை ஏற்படுத்தினார். 

குல்தீப், சஹல் சுழல் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. அவர்கள் கூட்டணி உலகக் கோப்பைக்கு அடுத்தும் தொடர வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். அனைத்து போட்டிகளிலும் அவர்கள் இருவரும் இணைந்து விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்.

இதுபோன்ற ஒரு சுழல்பந்து வீச்சு இணை வேறு எந்த அணியிலும் கிடையாது. அதனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டும் விளையாடியது கிடையாது. இது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். எனவே அனைத்து போட்டிகளுக்கும் சிறந்த அணியை தேர்வு செய்ய விரும்பினால் குல்தீப், சஹல் கூட்டணி நிச்சயம் இடம்பெற வேண்டும்.

இந்திய அணியின் முதன்மைப் பந்துவீச்சாளராக குல்தீப் உள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ஆகையால், அவரை தொடர்ந்து ஊக்குவித்து சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com