ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் 500 ரன்கள் குவித்ததுடன் புது சாதனைப் படைத்தார்.
2019 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டேவிட் வார்னர், இங்கிலாந்துடனான ஆட்டத்தில் 53 ரன்கள் விளாசினார். இதன்மூலம் மொத்த ரன் எண்ணிக்கை 500-ஐ கடந்தது.
இதன்காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3-ஆவது ஆஸி. வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, மேத்யூ ஹேடன் 659 ரன்களும், ரிக்கி பாண்டிங் 539 ரன்களும் எடுத்துள்ளனர். இவை இரண்டுமே 2007 உலகக் கோப்பைத் தொடரின் போது எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஜம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே உலகக் கோப்பைத் தொடரில் இருமுறை 500 ரன்களைக் கடந்தவர் என்ற அரிய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார். 1996-ஆம் ஆண்டில் 523 ரன்களும், 2003-ஆம் ஆண்டில் 673 ரன்களும் குவித்துள்ளார். அதிலும் 2003-ல் குவித்த 673 ரன்கள் தான் இன்றுவரை உலகக் கோப்பைத் தொடர்களில் ஒரு பேட்ஸ்மேனால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
உலகக் கோப்பைத் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த பேட்ஸ்மேன்களின் விவரம் பின்வருமாறு:
- சச்சின் டெண்டுல்கர் - 673 (2003)
- மேத்யூ ஹேடன் - 659 (2007)
- மஹேல ஜெயவர்தன - 548 (2007)
- மார்டின் கப்டில் - 547 (2015)
- குமார் சங்ககாரா - 541 (2015)
- ரிக்கி பாண்டிங் - 539 (2007)
- திலகரத்ன தில்ஷன் - 500 (2011)
- டேவிட் வார்னர் - 500* (2019)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியாளர்களை தேர்தல் ஆணையமே தேர்ந்தெடுக்கலாம்: உச்ச நீதிமன்றம்

6 ரன்கள் தேவையானபோது 6 யார்க்கர் பந்துகளை வீசிய இளம் பாகிஸ்தான் வீரர்..! யார் இந்த ஹுனைன் ஷா?

உங்களுக்கும் வரலாம் பேரிடர் எச்சரிக்கை ஒலி! பதற்றப்பட வேண்டாம்!!

செஞ்சிக் கோட்டையில் தூய்மை பணி: மகராஷ்டிரத்தில் இருந்து 250 போ் வருகை!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


