அஸ்வின் மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் புதன்கிழமை மோதுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் ஆட்டத்தில் வென்ற உத்வேகத்துடன் பஞ்சாப் உள்ளது. அதே நேரத்தில் ரஸ்ஸலின் 19 பந்துகளில் 49 ரன்கள் என்ற அபார ஆட்டத்தால் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது கொல்கத்தா.
இரு அணிகளும் ஏறக்குறைய சமபலத்துடனே உள்ளன. பஞ்சாப் அணி அதிரடி பேட்ஸ்மேன் கெயில், ராகுல், மயங்க் அகர்வால், சர்ப்ராஸ் கான், நிக்கோலஸ், ஆகியோரை நம்பி உள்ளது. பந்து வீச்சில் அஸ்வின், சாம் கர்ரன், முகமது ஷமி, முஜிப்பூர் ரஹ்மான் ஆகியோர் வலு சேர்க்கின்றனர்.
கொல்கத்தா அணியில் தினேஷ் கார்த்திக், உத்தப்பா, நிதிஷ் ராணா, கிறிஸ் லீன், ரஸ்ஸல், ஆகியோர் பேட்டிங்கிலும், பிராத்வொயிட், சுனில் நரைன், சாவ்லா, குல்தீப் யாதவ் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கின்றனர். சுனில் நரைன் விரல் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆட்டத்துடன் வரும் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வெளியூர் மைதானங்களில் ஆட வேண்டும். மேலும் ஏப்ரல் 12-ஆம் தேதி தில்லியுடன் நடக்கும் ஆட்டத்தில் கொல்கத்தாவில் மோதுகிறது.
இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா. நேரம்: இரவு 8.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காஞ்சி கச்சபேசப் பெருமான் சித்திரை உத்திரப் பெருவிழா கொடியேற்றம்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - கும்பம்

ஆடுகளத்தின் மீது குறை சொல்லும் நபரல்ல நான்... தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மகரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


